தோழியுடன் பேசிக் கொண்டிருந்த இளைஞர் வெட்டிக்கொலை... இளம்பெண் தலைமறைவு!

 
கொலை

சென்னை, அசோக் நகர் பகுதியில் இளைஞர் ஒருவர், காரில் தனது தோழியுடன் பேசிக் கொண்டிருந்த போது,  அவரது தோழியின் கண்முன்னே மர்ம கும்பல் ஒன்று இளைஞரை வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியை சேர்ந்த பிரகாஷ் என்ற இளைஞர், தனது தோழியுடன் காரில் சென்னையின் அசோக் நகர் வழியாக சென்றார். பின்னர் சாலையோரம் காரை நிறுத்தி இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் 4 பேர் இருசக்கர வாகனத்தில் அந்த இடத்துக்கு வந்தனர்.

காரில் வழிப்பறி கொள்ளை!! மக்களே உஷார்!! இப்படியும் நடக்கலாம்!!

அவர்கள் தங்களுடன் கொண்டு வந்திருந்த கூர்மையான ஆயுதங்களால் பிரகாஷை சரமாரியாக வெட்டியுள்ளனர். தோழியின் கண்முன்னே நடந்த இந்த கொடூரத் தாக்குதலில் பிரகாஷ் கடுமையாக காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாக்குதல் நடத்திய 4 பேரும் அங்கிருந்து வேகமாக தப்பியோடினர்.

இது குறித்த தகவல் அறிந்த அசோக் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரகாஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

பள்ளி மானவி தற்கொலை

இந்த சம்பவம் குறித்து விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. பிரகாஷை தாக்கியவர்களின் அடையாளம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அதேசமயம், சம்பவம் நடந்தபோது காரில் இருந்த பெண் தற்போது காணாமல் போயுள்ளார். அவர் யார், தாக்குதலில் அவருக்கு தொடர்பு இருக்கிறதா என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கொடூரக் கொலைச்சம்பவம் சென்னையின் அசோக் நகர் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?