தமிழகத்தை தொடர்ந்து தெலங்கானாவிலும் பள்ளிகளில் காலை உணவு திட்டம்!!

 
தெலங்கானா

இந்தியாவில் பல மாநிலங்கள் தமிழக அரசு செயல்படுத்தும் திட்டத்தை உன்னிப்பாக கவனித்துவருகின்றன. அவற்றில் சில திட்டங்களைதங்களது மாநிலத்திலும் செயல்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில்  பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவு மட்டுமின்றி மாணவர்களுக்கு காலையில் உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

மெனு

இத்திட்டம் தமிழகத்தில் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் அகில இந்திய அளவில் பலபாராட்டுக்களை பெற்றது. இதனை தெலங்கானா அரசு பின்பற்றி அங்கும் இன்று முதல்   காலை சிற்றுண்டி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.  இதற்காக தெலுங்கானா மாநில அரசு தமிழக அரசு செய்து வரும் காலை சிற்றுண்டி திட்டத்தை நேரில் பார்வையிட்டு அதிகாரிகளை அனுப்பி ஆய்வு செய்தனர்.

தெலங்கானா

 இந்த ஆய்வை தொடர்ந்து தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் தெலுங்கானா மாநிலத்திலும்  காலை சிற்றுண்டி திட்டத்தை கொண்டுவர   இன்று அரசாணை வெளியிடப்பட்டது.  
இந்நிலையில் தமிழ்நாட்டை பின்பற்றி தெலங்கானாவிலும் 1 முதல் 10 வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு, காலை உணவு திட்டம் இன்று முதல் அறிமுகமாகிறது. ரெங்கா ரெட்டி மாவட்டத்தில் முதல்வர்  சந்திர சேகர ராவ் இத்திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார்.  இதன் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள  43,000 அரசு பள்ளிகளில் பயிலும் 30 லட்சம் மாணவர்கள் பயன் அடைய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web