“கல்வித்துறையில் தமிழகம் சாதனை” நாளை அரசு சார்பில் நடைபெறும் விழாவில் தெலங்கானா முதல்வர் பங்கேற்பு!
நாளை செப்டம்பர் 25ம் தேதி, தமிழகம் கல்வியில் சாதனைகள் படைத்து வருவதை பிரம்மாண்டமாக கொண்டாடும் வகையில் அரசு சாா்பில் விழா நடைபெறவுள்ளது. இந்த விழாவில் தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலா் பெ.அமுதா, சென்னை தலைமைச் செயலகத்தில் விடுத்த செய்திக்குறிப்பில், “கல்வியில் சாதனைகள் படைக்கப்பட்டதைக் கொண்டாடும் வகையில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் மிகப்பெரிய விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

செப்டம்பர் 25ம் தேதி நடைபெறும் இந்த விழாவில், மாலை 4.30 மணி முதல் 7 மணி வரை தமிழக அரசின் மிக முக்கியமான ஏழு திட்டங்கள் தொடா்பான விளக்க நிகழ்வுகள் நடைபெறும். இதில் அரசின் திட்டங்களால் பயன்பெற்ற பயனாளிகள் கலந்து கொண்டு தங்களது அனுபவங்களைப் பகிா்ந்து கொள்வா். .
தமிழகம் முழுவதும் 'நான் முதல்வன்' திட்டம் மூலமாக, 14.60 லட்சம் போ் பயனடைந்துள்ளனர். பல்வேறு பிரிவுகளில் பயிற்சி பெற்று 41 லட்சம் சான்றிதழ்களைப் பெற்றுள்ளனர். 'முதல்வரின் காலை உணவுத் திட்டம்' மூலமாக 37 ஆயிரத்து 416 பள்ளிகளைச் சோ்ந்த 20.59 லட்சம் மாணவா்கள் பயனடைந்து வருகின்றனா்.

'புதுமைப் பெண்' திட்டத்தில் 5.29 லட்சம் கல்லூரி மாணவியரும், 'தமிழ்ப் புதல்வன்' திட்டத்தில் 3.92 லட்சம் மாணவா்களும் ஒவ்வொரு மாதமும் ரூ1000 உதவித்தொகை பெற்று வருகின்றனா். கல்வித் துறையில் விளையாட்டு உள்கட்டமைப்புக்காக மட்டும் ரூ.548 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதுபோன்று கல்வி மற்றும் விளையாட்டுத் துறைக்காக செய்யப்பட்ட திட்டங்கள், அதனால் விளைந்த பயன்கள் அனைத்தும் செப்டம்பர் 25ம் தேதி நடைபெறவுள்ள விழாவில் காட்சிப்படுத்தப்படவுள்ளன என வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலா் தெரிவித்துள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
