தேர்வுக்கட்டண உயர்வு நிறுத்தி வைப்பு.. கல்லூரி மாணவர்கள் உற்சாகம்.!!

 
அண்ணா பல்கலைக் கழகம்

அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வுக்கட்டணம் உயர்த்தப்பட்டது குறித்து எதிர்த்து தமிழகம் முழுவதும்  கல்லூரி மாணவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இந்த அறிவிப்புக்கு எதிரான தங்களது  கருத்துக்களையும் பதிவிட்டு இருந்தனர்.  சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும்  அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ், தமிழகம் முழுவதும் 400க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.

அண்ணா பல்கலை கழகம்

இந்த கல்லூரிகள் மூலம் சுமார் 4 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் இளநிலை, முதுநிலை பொறியியல் பட்டப்படிப்புகளை படித்து வருகின்றனர்.
இவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும், நவம்பர் – டிசம்பர் மாதத்திலும், ஏப்ரல் – மே மாதத்தில் செமஸ்டர் தேர்வு நடத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.  இந்நிலையில், மாணவர்கள் செமஸ்டர் தேர்விற்கு தயாராகி வரும் நேரத்தில் அண்ணா பல்கலைக்கழகம் தேர்வு கட்டணத்தை 50 சதவீதம் உயர்த்தியது மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கட்டண உயர்வுக்கு டிடிவி.தினகரன், அன்புமணி உட்பட பல  அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

ரூ. 50 கோடி வரை ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு செய்த அண்ணா & எம்.ஜி.ஆர் பல்கலை..,


இந்நிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழகம் உறுப்பு பொறியியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுக் கட்டண உயர்வு அறிவிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த செமஸ்டரில் பழைய கட்டண நடைமுறையே பின்பற்றப்படும். கூடுதலாக தேர்வு கட்டணம் வசூலிக்கப்பட்ட கல்லூரிகளில் மாணவர்களுக்கு திரும்பி அளிக்கப்படும் என அண்ணா பல்கலைக் கழக  துணை வேந்தர் வேல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!!

From around the web