உறுதியானது விவாகரத்து.. சானியா மிர்சாவை உதறிவிட்டு பாக் நடிகையை திருமணம் செய்த சோயப் மாலிக்..!!

 
சானியா மிர்சா

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் முன்னாள் கணவர் ஷோயப் மாலிக் பாகிஸ்தான் நடிகை சனா ஜாவேத் என்பவரை திருமணம் செய்து கொண்டார்

இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. இவருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயப் மாலிக்கும்  கடந்த 2010ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இஷான் என்ற 5 வயது மகன் உள்ளார். இந்நிலையில் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்பட்டது. சானியா மிர்சா ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயில் தங்கியிருந்தார். அவர்கள் பிரிந்ததற்கான காரணம் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

Sania Mirza's family reacts after Shoaib Malik marries Pakistani actress |  Cricket - Hindustan Times

இருவரும் பிரிந்த சில மாதங்களுக்குப் பிறகு, சானியா மிர்சா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "உடைந்த இதயங்கள் எங்கே போகும். அல்லாஹ்வைத் தேடி" என்று பதிவிட்டுள்ளார். இதனால் இருவரும் விவாகரத்து செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இது குறித்து இருவரும் கருத்து தெரிவிக்கவில்லை.

Shoaib Malik announces third marriage with Sana Javed - Times of India

இந்த குழப்பங்களுக்கு மத்தியில், ஷோயப் மாலிக் பாகிஸ்தான் நடிகை சனா ஜாவேத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கராச்சியில் எளிமையான முறையில் திருமணம் நடந்தது. ஷோயப் மாலிக்கின் 3வது திருமணம் இதுவாகும். இவர் முதலில் ஆயிஷா சித்திக் என்பவரை திருமணம் செய்து 2010ல் விவாகரத்து செய்தார்.சானியா மிர்சாவின் விவாகரத்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்பே திருமணம் நடந்தது.எனவே தலாக் மூலம் சானியா மிர்சாவை விவாகரத்து செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

அடக்கொடுமையே.. 112 வயசுல 8 வது கல்யாணம்..... மணமகனை வலைவீசி தேடும் பாட்டி... !

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க!

From around the web