பயங்கரம்... சித்தி கண்ணெதிரே இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 2 போலீசார்!

 
 சுந்தர்(32), சுரேஷ்ராஜ்


 
திருவண்ணாமலை மாவட்டத்தில்  இரவு ரோந்து பணியில் ஈடுபட்டபோது இளம்பெண்ணை 2 போலீசார்  கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ள விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.  அந்த வகையில் திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் போலீஸ் கான்ஸ்டபிள்கள் சுந்தர்(32), சுரேஷ்ராஜ்(30)   இருவரும் நேற்று முன்தினம் இரவு திருவண்ணாமலை ரிங்ரோடு பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

சிறுமிக்கு பாலியல் சீண்டல்
நேற்று அதிகாலை சுமார் 3 மணிக்கு  ஆந்திர மாநிலம், சித்தூரில் இருந்து திருவண்ணாமலைக்கு வாழைத்தார் ஏற்றி வந்த மினிவேனை தடுத்து நிறுத்தி, பைபாஸ் சாலை ஏந்தல் கிராம சந்திப்பு பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது, வேனில் 20 வயது இளம்பெண்ணும், 45 வயது பெண்ணும் இருந்தனர். இரவு நேரத்தில் எதற்காக 2 பெண்களை வேனில் அழைத்து வருகிறாய் என விசாரித்தனர்.  இருவரும் உறவினர்கள் எனவும், கோயிலில் சாமி தரிசனம் செய்ய விரும்பியதால் வேனில் அழைத்து வந்ததாகவும் டிரைவர் தெரிவித்துள்ளார்.
இருவரும் தாய், மகள் எனவும் தெரிவித்துள்ளார்.  கான்ஸ்டபிள்கள் சுந்தர், சுரேஷ்ராஜ்  வேனில் இருந்து 2 பெண்களையும் கீழே இறக்கி விசாரணை நடத்தினர்.  தன்னுடைய சித்தியுடன் (தந்தையின் 2வது மனைவி) கோயிலுக்கு வந்ததாக அந்த பெண் தெரிவித்துள்ளார். தொடர்ந்து கான்ஸ்டபிள்கள், இருவரையும் ஸ்டேஷனுக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்வதாகவும், வாழை லோடு இறக்கிவிட்டு வந்து அழைத்துச் செல்லும்படியும்  தெரிவித்துள்ளனர்.
பின்னர், 2 பெண்களையும் தனித்தனியே பைக்கில் இருவரும் உட்கார வைத்து, திருவண்ணாமலை- வேட்டவலம் சாலையில் ஏந்தல் கிராமத்துக்கு அருகே மயான பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.  சித்தியின் கண்ணெதிரில் 20 வயது இளம்பெண்ணிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.  2 பெண்களையும் அதே இடத்தில் விட்டுவிட்டு அங்கிருந்து கான்ஸ்டபிள்கள் சென்றனர்.

பாலியல்
இளம்பெண் மயக்கம் அடையவே சித்தி கதறி அழுதனர்.  சத்தம் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் விசாரித்தனர்.  ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச்சென்று திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் இளம்பெண்ணை சேர்த்துள்ளனர். மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தினர். இது குறித்து அளிக்கப்பட்ட  புகாரின் அடிப்படையில்  மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் கான்ஸ்டபிள்கள் சுந்தர், சுரேஷ்ராஜ்  மூவரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட சுந்தர் சமீபத்தில் ஒழுங்கு நடவடிக்கையால் வெளி மாவட்டத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு மாற்றப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?