லாரியின் மீது மோதிய கார்... கணவன் கண் முன்னே மனைவி உடல் நசுங்கி பலி!
தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் வசித்து வருபவர் 53 வயது ராஜன். இவர் சொந்தமாக செங்கல் தொழிற்சாலை வைத்து நடத்தி வருகிறார். இவர் தனது மனைவி விஜய ராணியுடன் திருச்சியில் நடைபெற்ற ஜெபக்கூட்டத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார். இதையடுத்து நிகழ்ச்சியை முடித்து விட்டு நேற்று இரவு சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார்.

இதில் இன்று அதிகாலை வள்ளியூர் அடுத்த ஏர்வாடி புறவழிச்சாலை மேம்பாலம் அருகே கார் வந்தபோது தூக்க கலக்கத்தில் இருந்த ஓட்டுநர், லாரியின் மீது மோதியது. இந்த கோரவிபத்தில் சம்பவ இடத்திலேயே ராஜனின் மனைவி விஜயராணி உயிரிழந்தார். ராஜன் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஓட்டுனர் லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
