அதிகாலையில் அதிர்ச்சி.. பயங்கர தீவிபத்தில் 7 பேர் பலி.. 40 பேர் படுகாயம்!!

 
மும்பை

மும்பையில்  கோரேகானில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஆசாத் மைதானம் அருகே உள்ள எம்ஜி சாலையில் உள்ள ஜெய் பவானி கட்டிடத்தில் திடீர்  தீவிபத்து ஏற்பட்டதும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது . சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த   தீயணைப்பு துறையினர்    தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அத்துடன்  கட்டிடத்தில் சிக்கியவர்களையும் மீட்டனர். இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர் 40க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள்   உடனடியாக அருகில் இருந்த  பல்வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  


இந்த தீ விபத்தில் படுகாயம் அடைந்த 46 பேரில், 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்நிலையில், மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் வெளியிட்ட பதிவில்   “நகராட்சி கமிஷனர் மற்றும் போலீசாரிடம் தொடர்ந்து பேசி வருகிறேன்.தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு எனது இரங்கல்கள்  அரசு அவர்களின் குடும்பங்களுக்கு அரசு 5 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கும். காயமடைந்தவர்களுக்கு அரசு சார்பில் சிகிச்சை அளிக்கப்படும்.” என ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.


 


அத்துடன்   “மும்பையில் உள்ள கோரேகானில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிர் இழந்ததை அறிந்து வேதனை அடைந்தேன்.  மும்பை போலீஸ் அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்து வருகிறோம்.  அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.” என தேவேந்திர ஃபட்னாவிஸ் கூறியுள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!