பயங்கரம்... லாரி மீது கார் மோதியதில் பற்றிக் கொண்ட தீ... 3 பேர் பலி!
சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் வசித்து வருபவர் 25 வயது மெகபூப் மகன் அப்துல் அஜீஸ். இவரது சகோதரர் 23 வயது சம்சுதீன் . கொளத்தூரை சேர்ந்தவர்கள் தீபக்(25), ரிஷி(25), ஆவடியை சேர்ந்தவர் மோகன்(25). இதில் அஜீஸ் சென்னையில் உள்ள ஐடி கம்பெனியிலும் மற்ற 4 பேரும் தனியார் வங்கியில் இன்சூரன்ஸ் பிரிவிலும் பணிபுரிந்து வருகின்றனர்.

விடுமுறை தினமானதால் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் சென்னையில் இருந்து மூணாறுக்கு சுற்றுலா செல்வதற்காக 5 பேரும் காரில் திருச்சிக்கு சென்றனர். காலை 6.45 மணிக்கு திடீரென கார் சென்டர் மீடியனில் மோதி, முன்னால் சென்ற லாரியின் பின்பக்கம் மோதியது. இதில் கார் தலைகுப்புற கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்தது. காரை ஓட்டி வந்த அஜீஸ் இறங்கி அவருடன் முன்னால் அமர்ந்திருந்த சும்சுதீனை வெளியே இழுத்தார். அதற்குள் தலையில் பலத்த காயமடைந்த சம்சுதீன் அதே இடத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.

அக்கம் பக்கத்தினர் சத்தம் கேட்டு ஓடி வந்து, காரின் பின்னால் அமர்ந்திருந்த தீபக்கை வெளியே இழுத்தனர். அதற்குள் கார் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. இதனால் காரில் மயங்கிக் கிடந்த ரிஷி, மோகன் இருவரும் தீயில் கருகி பலியாகினர். படுகாயமடைந்த அஜீஸ், தீபக் இருவரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
