இன்று அதிகாலை ராணுவ முகாம் மீது திடீர் தாக்குதல்: பயங்கரவாதி சுட்டுக்கொலை!

 
தீவிரவாதிகள்

 

இன்று அதிகாலை 4 மணிக்கு ஜம்மு - காஷ்மீட் பகுதியில் உள்ள ரஜோரி கிராமத்தில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.ஜம்மு - காஷ்மீரில் உள்ள ரஜோரி கிராமத்தில் ராணுவ முகாம் மீதான பயங்கரவாத தாக்குதல் முறியடிக்கப்பட்டது . பயங்கரவாத தாக்குதலில் ராணுவத்தினர் உடனடியாக பதிலுக்கு துப்பாக்கியால் சுட்டதில் பயங்கரவாதி கொல்லப்பட்டார்.

ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் இன்று அதிகாலை பாதுகாப்புச் சாவடியில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

தீவிரவாதிகள்



இது குறித்து வெளியான தகவல்களின்படி, ரஜோரி மாவட்டத்தில் உள்ள குந்தா பகுதியில் உள்ள பாதுகாப்புச் சாவடி மீது அதிகாலை 4 மணியளவில் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்தனர். சிறிது நேர துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு, ஒரு சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டது

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web