ஜனவரி 24, 25 தேதிகளில் டெட் தேர்வு... டிஆர்பி அறிவிப்பு!
தமிழகத்தில் பணியில் உள்ள இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) அறிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி தற்போது பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்காகவே இந்த சிறப்பு தேர்வு நடத்தப்படுகிறது.

டிஆர்பி வெளியிட்ட செய்திக்குறிப்பில், 2026ஆம் ஆண்டில் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுகள் ஜனவரி, ஜூலை, டிசம்பர் மாதங்களில் முறைப்படி நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. இதன்படி, தாள்-1 தேர்வு ஜனவரி 24ம் தேதி, தாள்-2 தேர்வு ஜனவரி 25ம் தேதி நடைபெறும்.

இந்த தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த மாதம் (நவம்பர்) வெளியாகும் என்றும், ஜூலை மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெறவுள்ள தேர்வுகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
