தாய்லாந்தில் வினோத கலாச்சாரம்... சுற்றுலா பயணிகளைக் கவர 'வாடகை மனைவி' திட்டம் !
தாய்லாந்து நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் அங்கு 'வாடகை மனைவி' என்னும் வினோதமான கலாச்சாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. தனியாகச் சுற்றுலா வரும் வெளிநாட்டினர் ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்தி சில நாட்களுக்கு ஒரு பெண்ணை மனைவியாக வாடகைக்கு அமர்த்திக் கொள்ளலாம். தாய்லாந்தின் முக்கிய சுற்றுலா நகரங்களான பட்டாயா போன்ற இடங்களில் இந்தத் தொழில் தற்போது செழித்து வளர்ந்து வருகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் வாடகைக்கு வரும் பெண்கள் சுற்றுலாப் பயணிகளுக்குத் துணையாக இருப்பதுடன் அவர்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்களையும் வழங்குகின்றனர். இதற்காகச் சுற்றுலாப் பயணிகள் சுமார் 1,16,000 ரூபாய் வரை செலவு செய்ய வேண்டியிருக்கும் என்று கூறப்படுகிறது. வெளிநாட்டுப் பயணிகளிடையே இந்த வசதி அதிக வரவேற்பைப் பெற்று வருவதால் அங்குக் குடும்பம் நடத்தும் பாணியிலான இந்தச் சேவை ஒரு வணிகமாகவே மாறியுள்ளது.
தாய்லாந்து நாட்டின் பொருளாதாரத்தில் சுற்றுலாத் துறை முக்கியப் பங்கு வகிக்கும் நிலையில் இதுபோன்ற தனித்துவமான முறைகள் பயணிகளை ஈர்க்கப் பயன்படுத்தப்படுகின்றன. எனினும் இத்தகைய கலாச்சாரம் சமூக ரீதியாகப் பல்வேறு விவாதங்களையும் விமர்சனங்களையும் அந்நாட்டில் ஏற்படுத்தியுள்ளது. இருந்தபோதிலும் தங்களது சுற்றுப்பயணத்தைத் தனிமையின்றி கழிக்க விரும்பும் பயணிகள் இந்தச் சேவையை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
