அட... அம்மி மிதித்து அருந்ததி பார்த்து தைவான் மணமக்கள் திருமணம்!

 
தைவான்

இந்தியாவில் ஒருபுறம் மேற்கத்திய கலாச்சாரம் பரவி வருகிறது.வார விடுமுறை கொண்டாட்டங்கள், இரவு நேர பார்ட்டிகள் , சிங்கிள் பேரண்ட் என தொடர்கதையாகி வருகிறது. அதே நேரத்தில் வெளிநாட்டினர் பலர் நமது நாட்டின் பாரம்பரியம், கலாச்சாரத்தில் ஈடுபாடு ஏற்பட்டு இங்கு வந்து  நமது நாட்டில் செட்டில் ஆகி வருகின்றனர். நமது நாட்டு இளைஞர்கள் பலரும் வேலை மற்றும் கல்விக்காக வெளிநாடு சென்று வருகின்றனர். அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த சித்தர்புரத்தில் ஒளிலாயம் சித்தர்பீடம் அமைந்துள்ளது.
தைவான் பிரசித்தி பெற்ற   இந்த சித்தர் பீடத்தில் ஒவ்வொரு பௌர்ணமிக்கும்   சிறப்பு வழிபாடு நடைபெறும். இதனை நேரில் காணவும் கலந்து கொள்ளவும்  இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் ,   சீனா, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர், தைவான் உட்பட  பல்வேறு நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபாடு செய்து வருகின்றனர்.  இந்நிலையில் சித்தர் பீடத்தில் தைவான் நாட்டை பூர்வீகமாக கொண்ட  யோங்ச்சென் என்ற ஆராய்ச்சியாளரும், ருச்சென் என்ற ஆசிரியரும் வந்துள்ளனர்.

5வது திருமணம்

இருவரும் காதலித்து வந்த நிலையில் தைவான் நாட்டில் ஏற்கனவே திருமணம் செய்து கொண்டனர்.  இந்தியாவில்  இருவரும் இந்து முறைப்படி திருமணம் செய்து கொள்ள  விரும்பியுள்ளனர்.இதற்காக தமிழ்நாடு வந்த இருவரும், இன்று தமிழ் முறைப்படி ஒளிலாயம் சித்தர் பீடத்தில் அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, பாத பூஜை செய்து திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமண விழாவில் அப்பகுதியில் வசித்து வரும் ஏராளமான பொதுமக்கள்  கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web