வைரல் வீடியோ... டிரம்ப்புடன் கோல்ஃப் விளையாடும் தல தோனி!!
கிரிக்கெட்டின் கூல் கேப்டன் எம்.எஸ்.தோனி. இவர் 2020ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் தோனி அவ்வப்போது விவசாயம், ராணுவத்தினருடன் பயிற்சியில் ஈடுபடுவது போன்றவற்றிலும் ஈடுபட்டு வருகிறார்.இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, அமெரிக்காவில் தனது விடுமுறையை கழித்து வருகிறார்.
MS Dhoni playing golf with Donald Trump.
— Johns. (@CricCrazyJohns) September 8, 2023
- The craze for Dhoni is huge. pic.twitter.com/fyxCo3lhAQ
அடுத்து சீன் ஐபிஎல் போட்டிக்காக தனது உடலையும், மனதையும் தயார்படுத்துவதில் தீவிரமாக இருந்த தோனி தற்போது அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.இந்த அமெரிக்க பயணத்தின் போது, அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தோனியை கோல்ஃப் விளையாட அழைத்துள்ளார். அதிபர் தேர்தலில் போட்டிப்போட தயாராகி வரும் டொனால்டு டிரம்ப் தோனியின் அமெரிக்க வருகையை தெரிந்துக்கொண்டு அவரை கோல்ஃப் விளையாட அழைத்துள்ளார்.
டொனால்டு டிரம்பின் அழைப்பை ஏற்று தோனி அவரை சந்தித்து கோல்ஃப் விளையாடிய நிலையில், முன்னாள் இந்திய கேப்டன் தோனி உடன் டொனால்டு டிரம்ப் தனது கோல்ஃப் விளையாட்டு உடையில் ஒரு படத்தை கிளிக் செய்து வெளியிடப்பட்டதில் தப்போது வைரலாகி உள்ளது.இந்த புகைப்படங்களில் தோனியும் டிரம்பும் அருகருகே நின்று கேமராவுக்கு போஸ் கொடுத்துள்ளனர். தோனி நீண்ட தலைமுடியும், தாடியும் கொண்டு புதிய லுக்கில் உள்ளார். இந்த போட்டோ உடன் வீடியோவும் வெளியாகியுள்ளது. மேலும் புகைப்படம் கொண்ட பதிவில் தல ஃபீவர் இன் USA என பதிவிடப்பட்டு உள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!