தலைவர் 171 படத்துக்காக மீண்டும் இணைந்த ”ஜெயிலர்” கூட்டணி!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ஜெயிலர் படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இருந்த போதிலும் வசூல் ரீதியாக சாதனை படைத்ததில் படக்குழு ஹேப்பி.இதனை கொண்டாடும் வகையில் சன்பிக்சர்ஸ் நிறுவனர் கலாநிதி மாறன் படக்குழுவுக்கு பரிசுகளை வாரி வழங்கினார். அதன்படி அனிருத், நெல்சன் மற்றும் ரஜினிகாந்துக்கு கார் பரிசளித்தார்.
இதையடுத்து ஜெயிலர் படத்தின் சக்சஸ் மீட்டில் அப்படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் சுமார் 300 பேருக்கு தங்க காசுகள் பரிசாக வழங்கப்பட்டு பிரியாணி கறிவிருந்தும் வைக்கப்பட்டது. ஜெயிலர் படத்தின் வெற்றி சக்சஸ் மீட்டாக கொண்டாடப்பட்டு புகைப்படங்களும், வீடியோக்களும் வைரலாகி வருகின்றன. இந்நிலையில், ரஜினி உடனான தங்களது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் கலாநிதி மாறன். ஜெயிலர் திரைப்படம் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா என அனைத்து மாநிலங்களிலும் சக்கைப்போடு போட்டது.
இந்த திரைப்படத்தில் ரஜினியுடன் கன்னட நடிகர் ஷிவ ராஜ்குமார், மலையாள நடிகர் மோகன்லால், இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப் நடித்திருந்தனர்.
தற்போது ரஜினியின் அடுத்தபடமான 171 வது திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாகவும், இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைப்பார், சண்டைக்காட்சிகள் அன்பறிவு என தகவல்கள் வெளியாகியுள்ளன. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இந்த படக்குழு மீண்டும் இணைய உள்ளது. இதனால் அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!