கரூர் கூட்ட நெரிசல்... சிபிஐ ஆதாரங்களை கேட்டுள்ளது... நிர்மல்குமார் விளக்கம்!

 
நிர்மல் குமார்
 

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணை, சென்னை பனையூர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விசாரணையில் சிபிஐ அதிகாரிகள், சம்பவத்துக்கான சிசிடிவி காட்சிகள், போட்டோக்கள் உள்ளிட்ட வீடியோ ஆதாரங்களை ஒப்படைக்குமாறு கேட்டனர். இதற்கு தவெக இணைப் பொதுச் செயலாளர் நிர்மல்குமார் ஒத்துழைப்பு அளிப்பதாகவும், ஏற்கனவே தமிழக காவல்துறைக்கு வழங்கிய அதே தகவல்களை மீண்டும் சிபிஐக்கு வழங்குவதாகவும் தெரிவித்தார்.

தவெக விஜய்

விசாரணை ஆரம்ப கட்டமாக நடைபெற்றதாகவும், இதில் எந்தவிதமான நேரடி விசாரணையும் இடம்பெறவில்லை என்றும் நிர்மல்குமார் கூறினார். “தமிழக காவல்துறை கேட்டபோது நாங்கள் விவரங்களை கொடுத்தோம். அதே விவரங்களை சிபிஐ கேட்டுள்ளதால், அதையும் வழங்குவோம்” என அவர் தெரிவித்தார். மேலும், சிபிஐ அதிகாரிகள் சம்மன் அளித்தால் நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்போம் என்றும் கூறினார்.

தவெக விஜய்

சிபிஐ விசாரணை தற்போது தீவிரமடைந்துள்ளது. சம்பவத்தின் காரணங்கள், ஏற்பாடுகள் மற்றும் பொறுப்புகளைத் துல்லியமாக அறியும் நோக்கில் பனையூர் அலுவலகத்தில் நடந்த இந்த விசாரணையில், வாகனங்கள், அனுமதிகள், கூட்ட நிர்வாகம் குறித்த ஆவணங்களும் சேகரிக்கப்பட்டன. விசாரணை முடிந்தபின் நிர்மல்குமார், கட்சி சார்பில் எந்தத் தவறும் இல்லை என்றும், உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு நியாயம் கிடைக்க சிபிஐ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!