பெரும் பரபரப்பு... தவெக நிர்வாகி குட்கா கடத்தல் வழக்கில் கைது!
சேலம் மாவட்டம் மேச்சேரி சந்தைப்பேட்டையில் தடை செய்யப் பட்ட ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை, மளிகை, பெட்டி கடை வியாபாரிகளுக்கு காரில் சப்ளை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில், மேச்சேரி போலீசார் விரைந்து சென்று அந்த காரை சுற்றிவளைத்து பிடித்தனர்.

இந்த காரில் மேச்சேரி பேரூர் தவெக செயலாளர் 27 வயது சுர்ஜித் இருந்தார். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில், கர்நாடக மாநிலத்தில் இருந்து ஹான்ஸ், குட்கா பொருட்களை கடத்தி வந்து உள்ளூர் வியாபாரிகளுக்கு விற்பனை செய்வது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, காரில் இருந்த 170 கிலோ ஹான்ஸ், 30 கிலோ புகையிலை பொட்டலங்கள், 27 கிலோ கூலீப் என மொத்தம் 227 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அத்துடன் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தவெக நிர்வாகி சுர்ஜித்தும் கைது செய்யப்பட்டார். காரில் குட்கா கடத்தி வந்த தவெக நிர்வாகி கைது செய்யப்பட்ட சம்பவம் மேச்சேரியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
