தாயுமானவர் திட்டம்... வயது வரம்பு 70-ல் இருந்து 65 ஆக தளர்வு!

 
தாயுமானவர் திட்டம்
 

 

மக்கள் நலனைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் தமிழக அரசு, தாயுமானவர் திட்டத்தின் பயனாளிகளுக்கான வயது வரம்பை தளர்த்தியுள்ளது. இதன் மூலம் இனி 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களும் திட்டத்தின் கீழ் பயனடைய முடியும்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, முதியோர், மாற்றுத்திறனாளிகள், திருநர்கள் போன்ற சிறப்பு பிரிவினருக்காக பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் ஒன்றாக, 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரேஷன் பொருட்களை வீட்டிற்கு நேரடியாக வழங்கும் தாயுமானவர் திட்டம் கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி தொடங்கப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பயனாளிகளின் இல்லங்களுக்கு நேரில் சென்று குடிமைப் பொருட்கள் விநியோகிக்கப்படுகிறது. தற்போது, இந்தத் திட்டத்தில் வயது வரம்பு 70-ல் இருந்து 65 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் மேலும் பல முதியோர் பயனடைய உள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!