அதிசய மணல் மாதா திருத்தலத்தின் 226வது ஆண்டு திருவிழா... கொடியேற்றத்துடன் தொடங்கியது!

 
தூத்துக்குடி

தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் சொக்கன்குடியிருப்பு அதிசய மணல் மாதா முதன்மை திருத்தலத்தின் 226வது ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள சொக்கன்குடியிருப்பு அதிசய மணல் மாதா முதன்மை திருத்தலத்தின் 226வது ஆண்டு திருவிழா திருவிழா செப். 22ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. இதையொட்டி, நேற்று புனித வளன் தொடக்கப் பள்ளி மாணவர், மாணவிகள், ஆசிரியர்கள் பெத்லகேம் அன்பியம், பீடபூக்கள், சின்னராணிபுரம் இறை மக்கள் சார்பில் திருப்பயணம், திருப்பலி நடைபெற்றது. 

அதைத் தொடர்ந்து தூத்துக்குடி மறை மாவட்ட முதன்மைகுரு ஜோசப் ரவிபாலன் திருவிழா கொடியேற்றினார். பின்னர் இரவு ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர் தட்டார்மடம் பங்குத் தந்தை கலைச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. 

திருவிழாவின் 2ம் நாள் முதல் 8ம் நாள் வரை தினமும் நவநாள்களில் திருப்பலி, ஜெபமாலை, நற்கருணை ஆசீர் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. 9ம் நாளான செப்.21ம் தேதி அதிகாலை திருப்பலி, திருப்பயணம், இரவு ஜெபமாலை, திருவிழா மாலை ஆராதனை ஆகியன மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி ஆண்டகை தலைமையில் நடைபெறும். முதன்மைகுரு ஜோசப் ரவிபாலன், தென்மண்டல பொறுப்பு தந்தை வெனிசுகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர். இரவு அதிசய மணல் மாதா சப்பர பவனி நடைபெறுகிறது.

பத்தாம் நாளான செப்.22ம் தேதி அதிசய மணல் மாதா சப்பர பவனி நடைபெறும். இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.திருவிழா நிறைவு நாளான செப்.23ம் தேதி காலை 6 மணிக்கு செம்மணலில் தோண்டி எடுக்கப்பட்ட புதுமை கோயிலில் திருத்தல உபகாரியங்களுக்காக நன்றி திருப்பலி மற்றும் கொடியிறக்கம் நடைபெறும்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை