நின்று கொண்டிருந்த லாரியின் மீது மோதிய பைக்.. சம்பவ இடத்திலேயே அண்ணன், தம்பி பலி!

 
 ராஜேஷ் - ரமேஷ்

திருப்பத்தூர் அருகே டீசல் காலியாகி நின்ற ஈச்சர் வண்டியின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் அண்ணன் தம்பிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த அத்திமரத்துபள்ளம் பகுதியைச் சேர்ந்த சாமுடி மகன்கள் ராஜேஷ் (54) ரமேஷ் (50) இருவரும் பிளம்பர் வேலை செய்து வருகின்றனர்.

 

இந்த நிலையில் நேற்று திருப்பத்தூருக்கு வேலைக்காக வந்திருந்தனர். பின்னர் வேலையை முடித்துவிட்டு நேற்று இரவு  திரும்பவும் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிய நிலையில், திருப்பத்தூர் மாவட்டம்  ராஜமங்கலம் பகுதியைச் சேர்ந்த குமார் என்பவர் கிருஷ்ணகிரிக்கு ஜெல்லி ஏற்றிக்கொண்டு செல்லும் பொழுது ஈச்சர் லாரியில் டீசல் காலியாகி கந்திலி அருகே உள்ள கள்ளேரி பகுதியில்  நின்றது .

அப்போது அந்த வழியாக வந்து கொண்டிருந்த ராஜேஷ் மற்றும் ரமேஷ் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தை நின்று கொண்டிருந்த ஈச்சர் லாரியின் மீது அதி வேகமாக மோதியதில் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அறிந்த கந்திலி போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து கந்திலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலைக்கு சென்று வீடு திரும்பிய நிலையில் ஈச்சர் லாரியின் பின்புறம் மோதி அண்ணன் தம்பிகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web