இன்று சட்டசபையில் முக்கிய மசோதா தாக்கல்!

 
சட்டப்பேரவை

தமிழக சட்டசபை கூட்டத்தின் இரண்டாம் நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய மசோதாவை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று காலை 9.30 மணிக்கு நடைபெற்ற சட்டசபை கூட்டம் திருக்குறள் வாசிப்புடன் தொடங்கியது. அதன்பின், மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் அரசு–மாநில முன்னாள் தலைவர்களுக்கு இரங்கல் தெரிவித்து மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. குறிப்பாக கரூரில் நிகழ்ந்த துயர சம்பவத்திலும் 41 பேர் உயிரிழந்ததை மனக்குழப்பமின்றி நினைவுகூரி அஞ்சலி செலுத்தப்பட்டது.

தமிழக அரசு சட்டப்பேரவை

இன்று புதன்கிழமை 2025–2026 நிதியாண்டின் கூடுதல் செலவுக்கான மானியக்கோரிக்கைகள் பேரவையில் தாக்கல் செய்யப்படும். காலை 9.30 மணிக்கு கேள்வி நேரம் நடைபெறி, பின்னர் கூடுதல் செலவுக்கான மானியக்கோரிக்கைகள் விவாதிக்கப்படும்.

சட்டப்பேரவை

இதையொட்டி, முதல்வர் ஸ்டாலின் அவரது இல்லத்தில் மூத்த வழக்கறிஞர்கள், என்.ஆர். இளங்கோ உள்ளிட்டவர்களுடன் ஆலோசனை நடத்தி, அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டும் நெறிமுறைகளுடன் மசோதாவை இன்று சட்டசபையில் தாக்கல் செய்யும் திட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?