அவலம்... அட்டைப் பெட்டியில் குழந்தையின் உடல்... அரசு மருத்துவமனைகளில் அலட்சியம்!!

 
அட்டைப் பெட்டியில் குழந்தை

சென்னை புளியந்தோப்பு பகுதியில் வசித்து வருபவர்கள்  மசூத் - சௌமியா தம்பதி. சௌமியா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். டிசம்பர் 6ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டது. மிக்ஜாம் புயல் பாதிப்பின் காரணமாக நீண்ட நேரமாக ஆம்புலன்ஸ்  கிடைக்கவில்லை. பெரும் போராட்டத்துக்குப் பிறகு சௌமியாவை அவரது கணவர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். சௌமியாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு காவல் துறை உதவியுடன் கொண்டு செல்லப்பட்டார்.  மருத்துவர்களும், பணியாளர்களும் இருந்தபோதும், மருத்துவமனையில் மின்சார வசதி எதுவும் இல்லை. இதனையடுத்து சௌமியா  ஆம்புலன்ஸ் உதவியுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு  அழைத்து வரப்பட்டுள்ளார்.

கீழ்ப்பாக்கம்

அங்கு சவுமியாவுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் அனைத்தும் வழங்கப்பட்டன. ஆனால் துரதிர்ஷ்டவசமாக குழந்தை இறந்தே பிறந்தது.  அங்கு இறந்த நிலையில் பிறந்த குழந்தையை   முறையாக துணிகளைச் சுற்றி பெற்றோரிடம் ஒப்படைக்காமல், அட்டைப் பெட்டியில் வைத்து கொடுத்துள்ளனர்.   அட்டைப் பெட்டியில் வைத்து கொடுக்கப்பட்ட குழந்தையை அவரது தந்தை எடுத்துச் செல்லும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வைரலானது.  இதனைத் தொடர்ந்து   உயிரிழந்த குழந்தையின் உடலை சரியான முறையில் ஒப்படைக்காத பிணவறை பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை எழுந்தது. இந்தப் புகாரின் அடிப்படையில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் பிணவறை பணியாளர் பன்னீர்செல்வம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து  மருத்துவக் கல்வி இயக்குநர் சங்குமணி  “இறந்த குழந்தையை பிணவறையில் இருந்து கொடுப்பதற்கு லஞ்சம் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.   குழந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் முதல் பணியாளர்கள் வரை அனைவரிடமும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.  இறந்தே பிறக்கும் குழந்தைகளின் உடலை உரிய நடைமுறைகளைப் பின்பற்றி கொடுக்க வேண்டும் என அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது" எனக் கூறினார். 
 இறந்த குழந்தையின் தந்தை மசூத் கூறியது: “டிசம்பர் 6-ம் தேதி   காலையில் ஒரு 11 மணிக்கு எனது மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டது.  

ஆம்புலன்ஸ்

வீட்டைச் சுற்றிலும் தண்ணீர் தேங்கியிருந்ததால், எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை. போன் போகவில்லை, கரன்ட் இல்லை, நெட்வொர்க்கும் கிடைக்கவில்லை. ஆனாலும் தொடர்ந்து போன் செய்ய முயற்சித்தும், எதுவும் நடக்கவில்லை. உடனே நான் வீட்டைவிட்டு வெளியே சென்று வாகனங்கள் ஏதாவது கிடைக்குமா என்று பாரத்து வந்தேன். அப்போது என் கழுத்து வரை தண்ணீர் இருந்தது.   வீடு திரும்பியபோது வீட்டில் ஒரே பெண்கள் கூட்டம். குழந்தை இறந்து பிறந்துவிட்டதாகவும், என்னை உள்ளே செல்ல வேண்டாம் எனவும்  கூறினா். அப்போது அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸை அழைக்க முயற்சித்தனர். ஆனாலும், அவர்களை போன் வேலை செய்யாததால் தொடர்புகொள்ள முடியவில்லை. உடனே, எனது மனைவியை மட்டுமாவது காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டு வந்தோம். பெண் காவலர் ஒருவரிடம் உதவி கோரினேன். அந்தக் காவலர் சொல்லி, எனது மனைவியை அந்த மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அப்போது அவர்கள், குழந்தையை சுத்தப்படுத்தி கொடுத்தனர்.  குழந்தையை அட்டைப் பெட்டியில்தான் தர வேண்டும். காரணம், இறந்து பிறந்த குழந்தை என்பதால், தூக்க முடியாது. அதேபோல், குழந்தையை துணியில் சுற்றித் தந்திருக்க வேண்டும். ஆனால், அப்படி தரவில்லை. மற்றபடி மருத்துவமனை பணியாளர் மீது தவறு எதுவும் இல்லை" எனக்  கூறினார்.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!