டியூஷன் செல்வதாக கூறி ஏழுமலையானை தரிசிக்க தனியாக வந்த சிறுவன்.. பகீர் பின்னணி!

 
மகேந்தர் ரெட்டி

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள மீர்பேட் தாசரி நாராயண ராவ் காலனியை சேர்ந்தவர் மதுசூதன் ரெட்டி. இவரது மனைவி கவிதா. இவர்களது 2வது மகன் மகேந்தர் ரெட்டி அங்குள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 4ம் தேதி டியூஷனுக்கு செல்வதாக கூறி வீட்டில் இருந்து புறப்பட்டார். ஆனால் இரவு வெகு நேரமாகியும் மகேந்திர ரெட்டி வீடு திரும்பாததால், அவரது பெற்றோர் மீர்பேட்டை போலீசில் புகார் அளித்தனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அவர் பைக்கில் செல்வதை போலீசார் கண்டுபிடித்தனர்.

அதன் அடிப்படையில், சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில், அவர் மலக்பேட்டை ரயில் நிலையத்தை அடைந்து, அங்கிருந்து ரயிலில் திருப்பதிக்கு சென்றது தெரியவந்தது. இது குறித்து திருப்பதி போலீசாருக்கு தகவல் கொடுத்த போலீசார், திருப்பதி பேருந்து நிலையம் அருகே மகேந்தர் ரெட்டி இருப்பதை கவனித்த போலீசார், அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அதற்கு முன் பேருந்தில் வந்த ஒருவர் மூலம் தனது தாய் கவிதாவுக்கு போன் செய்து, தான் ஏழுமலையானை தரிசனம் செய்ய வந்ததாகவும், சுவாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்புவதாகவும் மகேந்தர் ரெட்டி கூறியுள்ளார்.

பின்னர் திருப்பதி போலீசார் சிறுவனை வீடியோ கால் மூலம் பெற்றோரிடம் பேச வைத்தனர். அப்போது அவர்களது உறவினர்கள் திருப்பதியில் இருந்ததால் அவர்களை பெற்றோருடன் சேர்த்து அனுப்பி வைத்தனர். மகேந்தர் ரெட்டி செய்தியாளர்களிடம் பேசியதாவது: ஏழுமலையான் கோவிலுக்கு பெற்றோருடன் 15 முறை சென்றுள்ளேன். நான் திருப்பதிக்கு செல்ல விரும்பினேன். கடந்த ஞாயிற்றுக்கிழமை டியூஷன் போகாமல் ரயிலில் திருப்பதி வந்தேன்.

இதற்காக ரயிலில் ஏறி ரூ.100ஐ எடுத்துக்கொண்டு திருப்பதி வந்தேன். தரிசனத்திற்காக 10 மணிக்கு மலைக்கு சென்றேன். அதிகாலை 4 மணிக்கு தரிசனம் முடிந்து வீடு திரும்ப பேருந்து நிலையத்தை அடைந்தேன். என்னுடன் பேருந்தில் வந்த ஒரு மாமா மூலமாக அம்மாவுக்கு போன் செய்து வீட்டுக்கு வருவதாகச் சொன்னேன், என்றார்.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி