பெற்றோர்களே உஷார்.. ஆன்லைன் விளையாட்டால் கை, கால்கள் கட்டப்பட்டு மன நலம் பாதிக்கப்பட்ட சிறுவன்!!

கொரோனா காலத்திற்கு முன் வீட்டிற்கு அம்மா, அப்பாவிடம் 2 மொபைல் போன்கள் தான் . ஆனால் அதன் பிறகு ஆன்லைன் கிளாஸ், டீயூசன் என காரணம் சொல்லி எல்.கே.ஜிபடிக்கும் குழந்தைக்கு கூட தனி போன் தான். கொரோனா காலகட்டம் முடிந்தபிறகும் அவர்களால் அதை விட முடியவில்லை. பெற்றோர்களும் எத்தனை சொன்னாலும் கேட்பதும் இல்லை. உடனே மன அழுத்தத்திற்கு ஆளாகி விபரீத முடிவுகளை எடுத்து விடுகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் நடுத்தர குடும்ப மாணவன் ஒருவன் 11ம் வகுப்பு படித்து வருகிறான். அவன் தொடர்ந்து போனில் ஆன்லைன் கேம் விளையாடி வந்துள்ளான். விளையாட்டுக்கு முற்றிலும் அடிமையான அந்த சிறுவன் பெற்றோருக்கு தெரியாமல் இரவிலும் கூட விளையாடி கொண்டிருந்துள்ளான். இதனால் அச்சிறுவனுக்கு மனநலம் பாதிக்கப்பட்டதோடு, நரம்பு தளர்ச்சி ஏற்பட்டுவிட்டது. இதனால் கை, கால்களும் நிலையாக இல்லாமல் போனது. பெற்றோர் சிறுவனை கண்காணித்து, உடனடியாக அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவன் முற்றிலுமாக மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதை உறுதி செய்தனர். அதற்கு சிகிச்சை அளிக்க தொடங்கினர். விளையாட்டு மோகத்தில் இருந்த மாணவன் தற்போது உடல்நலம் பாதிக்கப்பட்டு கை, கால்கள் நிலையாக இல்லை. இதனால் கை, கால்கள் கட்டப்பட்டுள்ளன. மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...