தாலியின் மஞ்ச வாசம் கூட மறையலயே... திருமணமான மறுநாளே புதுமணப்பெண் உயிரிழப்பு...கதறும் பெற்றோர்..!!

 
தாலி

சேலம் மாவட்டம், இடைப்பாடி வெள்ளாண்டிவலசை  கிராமத்தில் வசித்து வருபவர்   செந்தில்குமார். இவர்   பேக்கரி ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் இடைப்பாடி அங்காளம்மன் கோவில் தெருவில் வசித்து வரும்  திருநாவுக்கரசு மகள் சுதாவுக்கும் நவம்பர் 16ம் தேதி   முருகன் கோயிலில் திருமணம் நடைபெற்றது.  திருமணமான மறுநாளே சுதாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.  சிறிது நேரத்தில் மயக்கம் வருவதாக கூறி சரிந்து விழுந்துள்ளார்.

சுதா

அதிர்ச்சி அடைந்த கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர்  உடனடியாக சுதாவை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். தகவல் அறிந்து வந்த சுதாவின் உறவினர்கள் தாலி கட்டி மஞ்ச வாசம்  கூட மறையலையே , எங்களை விட்டுட்டு போயிட்டியே ராசாத்தி என கதறித் துடித்து காண்பவர்களை கண் கலங்க செய்தது.

விசாரணை

மருத்துவர்கள் போலீசாருக்கு அளித்த தகவலின் பேரில் மருத்துவமனைக்கு விரைந்த காவல்துறையினர் சுதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் இச்சம்பவம் குறித்து  வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தியதில் சுதாவுக்கு ஏற்கனவே மூச்சுத் திணறல் இருந்தது தெரியவந்தது. இதற்காக கடந்த  4 ஆண்டாக மருத்துவம் பார்த்து வந்ததும்  உறுதி செய்யப்பட்டது.  திருமணமான மறுநாளே   மணப்பெண் உயிரிழந்ததால் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.  

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!!

From around the web