தன் கல்யாணத்திற்கு செல்ல மெட்ரோவில் பயணம்.. மணப்பெண்ணின் வீடியோ வைரல்.!

 
பெங்களூரு மணப்பெண்

மணமகள் தனது திருமணத்திற்குச் செல்ல மெட்ரோவில் பயணம் செய்துள்ளார். பெங்களூருவை சேர்ந்த மணப்பெண் ஒருவர் மெட்ரோவில் தன்னுடைய திருமணத்திற்கு சென்றுள்ளார். வைரலாகி வரும் ஒரு வீடியோவில், மெட்ரோ டிக்கெட்டுகளை வாங்கிவிட்டு அந்த பெண் தனது குடும்பத்தினருடன் ரயிலில் பயணம் செய்வது போல் உள்ளது. உடல் முழுவதும் அணிகலன்கள், விலையுயர்ந்த உடை, முகமெங்கும் மணப்பெண் மேக்கப் என மெட்ரோ ரயிலில் பயணிக்கும் வீடியோ இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.


இந்தியாவில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களில் பெங்களூருவும் ஒன்று. இந்த போக்குவரத்து நெரிசல் பிரச்னையால், 3 மணி நேரம் கடந்தும், அரை மணி நேரத்தில் இலக்கை அடைய முடியாமல் பலர் தவிக்கின்றனர். இதனால், மணமகள் தனது திருமணம் நடைபெறும் இடத்திற்குச் செல்லவும், குறித்த நேரத்தில் செல்லவும் மெட்ரோ ரயில் மூலம் பயணிக்க வேண்டியுள்ளதாக தெரிகிறது.

இது பெங்களூருவின் உண்மை நிலையை காட்டுகிறது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ ட்விட்டர் X இல் இதுவரை 30,000 பார்வைகளைக் கடந்துள்ளது. நூற்றுக்கணக்கான லைக்குகளைக் கடந்துள்ளது. தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web