அதிர்ச்சி.... கட்டும்போதே இடிந்து விழுந்த பாலம்!!

 
விருதுநகர் பாலம்

விருதுநகர் மாவட்டம்  கூமாபட்டி பேருந்து நிலையம் அருகே இருந்த தரைப்பாலம்  கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேதமடைந்தது. இதனால்  பாலத்திற்கு அடியில் செல்லக்கூடிய கழிவுநீர் தேங்கி நின்றது. போக்குவரத்திற்கு பாலம் மிகவும் குறுகலாகவும் இருந்ததன் காரணமாக பொதுப்பணித்துறை சார்பில் புதிய பாலம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதனையடுத்து புதிய பாலம் அமைக்கும் பணிக்கு ராஜபாளையம் தனியார் ஒப்பந்ததாரரிடம் விடப்பட்டது.

விருதுநகர் பாலம்

இந்நிலையில் புதிதாக பாலம் கட்டும் பணி கடந்த  2 வாரத்திற்கு முன்பு தொடங்கப்பட்ட நிலையில்  இன்று பாலத்திற்கு கம்பிகள் கட்டப்பட்டு கான்கிரீட் போடும் பணி நடைபெற்று வந்தன.  அங்கு தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக பாலம் இடிந்து விழுந்து திடீர் விபத்து ஏற்பட்டது.

கூமாபட்டி


இந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிர்ப்பலிகள் எதுவும் ஏற்படவில்லை. பணிகள் அனைத்தும் அவசர அவசரமாக நடைபெற்றது தான் இந்த விபத்திற்கு காரணம் எனவும், இது குறித்து ஒப்பந்தகாரர் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் பணிகள் சரியான முறையில்  நடைபெறவில்லை எனில் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும்   பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web