தங்கையை கொலை செய்தவரை பழிக்கு பழி வாங்கிய சகோதரர்கள்!! வெறிச்செயல்!!

 
சுகன்யா

கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கம் கிராமத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர்  சுகன்யா .  இவரது கணவர் வெங்கடேசன். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள்.   வெங்கடேசன் மலேசியாவில் வேலை பார்த்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு சுகன்யா தனது 2 குழந்தைகளுடன் புதுப்பாக்கத்தில்   ஊராட்சி அலுவலகம் அருகே வாடகை கட்டிடத்தில் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்தார்.

சுகன்யா

 இவரது கடையை ஒட்டி மின் சாதனங்கள் பழுது பார்க்கும் கடை நடத்தி வந்த பாலாஜிக்கும், சுகன்யாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு  கள்ளக்காதலாக மாறியது.   நவம்பர்  7ம்தேதி திங்கட்கிழமை சுகன்யா எரித்து கொலை செய்யப்பட்டார்.  சுகன்யாவுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த பாலாஜியின் தந்தை குமார் இந்த கொலையை செய்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


பாலாஜி, நேற்று   கடையில்  மோட்டார்களுக்கு செப்புக்கம்பி கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது காரில் வந்த 6 பேர் கொண்ட கும்பல், பாலாஜியின் கடைக்குள் புகுந்து  அவரை சராமாரியாக வெட்டியது.     தப்பிக்க வெளியே ஓடிவந்த பாலாஜி சாலையோரம் தடுமாறி கீழே விழுந்தார்.  விடாமல் துரத்தி வந்த   கும்பல் அவரது தலை, கை, கால், முகம் என  20க்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டது.  இச்சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை  பாலாஜியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக   மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது.  

போலீஸ்

காரில் தப்பிச் சென்றவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.    தீவிர வாகன சோதனையில்  அவர்களை போலீஸார் மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட சுகன்யாவின் சகோதரர்கள்  தங்கையை கொன்ற நபர்களை பழிக்குப்பழி வாங்க இந்த கொலையை செய்ததை ஒப்புக் கொண்டனர். சுகன்யாவின் சகோதரர்களும், நண்பர்களும் சேர்ந்து இந்த சம்பவத்தை நிகழ்த்தியதாகக் கூறினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web