அதிர்ச்சி... மகளை துண்டு, துண்டாக்கி சமைத்த கொடூரம்.. தாய் பகீர் வாக்குமூலம்!!

 
ரூத்

 பிரேசில் நாட்டில் வசித்து வருபவர்   ரூத் ஃப்ளோரியானோ.  இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்.  கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். இவர்  டேட்டிங் செயலி மூலம் ஒருவருடன் டேட் செய்து வந்தார். இவருடைய  9 வயது பெண் குழந்தை சில்வா, தனக்கு தந்தை வேண்டும் எனவும்,  தந்தையுடன் தான் செல்வேன் எனவும் அடம்பிடித்துக் கொண்டிருந்தார்.  தொடர்ந்து பலமுறை அவர் தனது தந்தையை வேண்டும் என்று, தாயை தொந்தரவு செய்துகொண்டே இருந்தார்.   இவர் சமாதானப்படுத்தியும் முடியவில்லை. இதனால் மகளை அடித்து அமைதியாக்கினார்.  ஒரு நாள் தாய் தன் காதலருடன் டேட்டிங் முடித்து போதையில் வீடு திரும்பினார்.  

ரூத்
அந்த சமயத்தில் இந்த சிறுமி மீண்டும் தந்தையை கேட்டு அடம்பிடித்தார்.   தாய் சமாதானப்படுத்தியும்  சிறுமி கேட்கவில்லை. இதனால் போதையில் முழு ஆத்திரத்தில்  சிறுமியின் நெஞ்சில் குத்தியுள்ளார். இதில் சிறுமி சுருண்டு விழுந்து இறந்தார். சிறுமி இறந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த தாய், உடனடியாக சடலத்தை மறைக்க எண்ணினார்.   சிறுமியின் உடலை ஒரு சாக்குமூட்டையில் கட்டி ஓரமாக வைத்தார்.  சடலத்தை மறைப்பது குறித்து சமூக வலைதளங்களில் தேடிப்பார்த்தார்.  அதில் கிடைத்த தகவலின் படி குழந்தையின் உடலை  துண்டு துண்டாக வெட்ட முடிவு செய்து அதற்காக தேவையான பொருட்களை கடையில் வாங்கி, அதனை வைத்தே தனது குழந்தையின் உடலை துண்டு துண்டாக வெட்டி பதப்படுத்தி   சில உடல் உறுப்புகளை சமைத்துள்ளார்.

சிறுவன் பலி

ஆனால்  தொடர்  துர்நாற்றத்தால் அக்கம்பக்கதினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.  போலீசார்  நடத்திய சோதனையில் சிறுமியின் உடல் பாகங்கள் குளிர்சாதன பெட்டியில் இருந்து மீட்கப்பட்டது. தொடர்ந்து தாயிடம் நடத்திய விசாரணையில் இந்த சம்பவம் ஆகஸ்ட் 8, 9 தேதிகளில் போதையில் நடந்தது குறித்து வாக்குமூலம் அளித்தார். தாய்  ஆகஸ்ட் 28ம் தேதி கைது செய்யப்பட்டார். மீதம் அவரிடம் இருந்த 2 பிள்ளைகளையும் போலீசார் மீட்டு குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் சேர்த்து விட்டனர். மது   போதையில்   9 வயது மகளை தாயே கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி எறிந்து சமைத்த  சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web