கேப்டன் வந்தாச்சு... விஜயகாந்த் தலைமையில் டிசம்பர் 14ம் தேதி தேமுதிக செயற்குழு, பொதுக்குழு கூட்டம்!

 
விஜயகாந்த்

பூரண உடல்நலத்துடன் இன்று மியாட் மருத்துவமனையில் இருந்து கேப்டன் விஜயகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளது தமிழக மக்களிடையே பெரும் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்சிக்கு அப்பாற்பட்டு, திரையுலகில் மட்டுமல்லாது பொதுமக்களிடையே நடிகர் விஜயகாந்தின் மீது தனி ப்ரியம் இருந்து வருவது நிஜம். மருத்துவமனையில், சிகிச்சைப் பலனளிக்கவில்லை... அபாய கட்டம் என்றெல்லாம் செய்திகள் வெளியான நிலையில், மக்கள் மனதிற்குள் பிரார்த்தனை செய்ய துவங்கியிருந்தனர்.


மருத்துவமனையில் இருந்து இன்று விஜயகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், தேமுதிகவுக்கும் ஆக்ஸிஜன் ஏற்றப்பட்டுள்ளது. இனி கட்சியை சுழன்றடிக்கும் சுனாமியாக நடத்த முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தேர்தல் வரை சுழன்றடிக்க திட்டங்கள் வகுக்கப்படுவதாக கூறுகிறார்கள். இந்நிலையில், வரும் டிசம்பர் 14ம் தேதி தேமுதிகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளதாக தலைமை கழகம் அறிவித்துள்ளது. 

வரும் டிசம்பர் 14ம் தேதி வியாழக்கிழமை காலை 8.45 மணியளவில், சென்னை, திருவேற்காட்டில் உள்ள GPN பேலஸ் திருமண மண்டபத்தில் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளதாகவும், பொதுக்குழு கூட்டத்தில் தேமுதிக நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் கலந்து கொள்கிறார். மேலும் கழக பொருளாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் கழகத்தின் ஆக்கப் பணிகள் குறித்தும், எதிர்கால திட்டங்கள் குறித்தும் கலந்து ஆலோசித்து சிறப்புரை ஆற்றவுள்ளார்கள் என்று கட்சி தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது.

சென்னை திரும்பிய தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்

இக்கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள், கழக உயர்மட்டக்குழு உறுப்பினர்கள், தேர்தல் பணி குழு செயலாளர்கள், கழக அணி செயலாளர்கள், கழக அணி துணை செயலாளர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய கழக செயலாளர்கள், நகர கழக செயலாளர்கள், பகுதி கழக செயலாளர்கள், பேரூராட்சி கழக செயலாளர்கள், மற்றும் புதுச்சேரி, கர்நாடகம், கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா, டில்லி, அந்தமான் ஆகிய மாநில கழக செயலாளர்களும் இப்பொதுக்குழு கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web