அதிர்ச்சியில் அலறிய கோவை... மோதிய வேகத்தில் தீப்பிடித்த கார்... அமர்ந்தபடியே உடல் கருகி பலியான ஓட்டுநர்!
கோவை, மேட்டுப்பாளையம் அன்னூர் பிரதான சாலையில் பாலத்தின் மீது மோதிய வேகத்தில் பள்ளத்தில் விழுந்து கார் தீப்பிடித்து எரிந்ததில், காரில் அமர்ந்தபடியே உடல் கருகி கிடந்தது கோவையை உலுக்கியெடுத்திருக்கிறது. இந்த விபத்து குறித்த தகவல் அறிந்து போலீசாரும், தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். ஓட்டுநர் இருக்கையில் கருகிய நிலையில் ஆண் சடலம் அமர்ந்த நிலையிலேயே இருந்தது கண்டு போலீசார், யார் அவர்? என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அன்னூர் பிரதான சாலையில் அதிகளவில் வாகனங்கள் எப்போதும் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும். பெரும்பாலும் அந்த சாலை வழியே வரும் வாகனங்கள், காலியான சாலை என்பதால் அதிவேகமாக வந்தும் சென்றும் கொண்டிருக்கும் நிலையில், நேற்று செப்டம்பர் 9ம் தேதி இரவு சுமார் 11:30 மணிக்கு மேட்டுப்பாளையம் அன்னூர் பிரதான சாலையில் வேகமாக வந்த கார் ஒன்று, தென்திருப்பதி நால்ரோடு குளிர் பதன கிடங்கு அருகே வந்து கொண்டிருந்த போது திடீரென நிலைதடுமாறி சாலை ஓரத்தில் இருந்த பாலத்தின் மீது மோதி பள்ளத்தில் விழுந்தது.
கார் பள்ளத்தில் விழுந்த வேகத்தில் திடீரென எதிர்பாராத விதமாக தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதில் காரின் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்திருந்தவரால் தீப்பிடித்து எரிந்துக் கொண்டிருந்த காரில் இருந்து வெளியே வர முடியவில்லை. இதனால் அவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் கிடைக்கப்பெற்றதும் மேட்டுப்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலசுந்தரம் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயணைப்பு படை வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இது குறித்து தகவல் கிடைக்கப்பெற்றதும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர், காரில் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்த நிலையிலேயே உடல் கருகி இருந்த சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காரில் தீப்பிடித்து உடல் கருகி இறந்தவர் யார் என்று உடனடியாக அடையாளம் தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
