கிணற்றுக்குள் பாய்ந்த கார்... தந்தை பலி... பயிற்சி பெற்ற போது பரிதாபம்!!

 
கோபி

நாமக்கல் மாவட்டம் பெரியகுளத்தில் வசித்து வருபவர்  ராஜேந்திரன். இவரது மகன் கோபி. இவர் தனது தந்தைக்கு   கார் கற்றுக் கொடுத்தார்.  அப்போது காரை பின்புறம் எடுப்பதற்கு பதிலாக தவறுதலாக முன்னோக்கி செலுத்திவிட்டார்.  இதனால் கார் கட்டுப்பாட்டை இழந்து   விவசாய கிணற்றுக்குள் பாய்ந்தது.   இதில் கோபி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். அவரது தந்தை ராஜேந்திரன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

கோபி


 இச்சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் மற்றும் தீயணைப்பு துறையினர்   ராஜேந்திரனை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். சுமார் 8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு காரையும் உயிரிழந்த ராஜேந்திரன் உடலையும்  மீட்டனர்.

கிணறு

காவல்துறையினர்  சடலத்தை மீட்டு  பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம்  குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.மகன் கார் கற்று கொடுத்த சமயத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக தந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web