பள்ளத்தில் உருண்ட கார்.. ஒருவர் பலி.. 8 பேர் படுகாயம்!! பிறந்த நாள் கொண்டாட்டத்தில் சோகம்!!

 
முனீஸ்வரன்

சிவகாசி அருகே உள்ள சாட்சியாபுரம் ஆசாரி காலனியில் வசித்து வருபவர்   ரவிச்சந்திரன் மகன் ஹரிசங்கர்.   நண்பர் கார்த்திகேயன்  பிறந்த நாளை நண்பர்களுடன் கொண்டாட முடிவு செய்தார்.  தன்னுடைய   நண்பர்களுடன்  பிரபாகரன்,   ராஜாமுகமது ,  சுந்தரமூர்த்தி ,   மாரீஸ்வரன்   முனீஸ்வரன்    மற்றும் சிலருடன் கார்த்தீஸ்வரனுடன்  சாத்தூர் அருகே உள்ள உப்பத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

விபத்து
அந்த காரில் மொத்தம்  9 பேர் இருந்தனர். காரை முனீஸ்வரன் ஓட்டிச் சென்றதாக கூறப்படுகிறது. அதிகாலையில் கோணம்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை மீறிய அந்த கார் சாலையோரம் உள்ள ஒரு பள்ளத்தில் உருண்டது. இதில் காரில் பயணம் செய்த அனைவரும் படுகாயம் அடைந்தனர். அதைப் பார்த்ததும் அந்த வழியாக சென்றவர்கள் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக முனீஸ்வரன், சுந்தரமூர்த்தி ஆகியோர் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைக்கப்பட்டனா்.

போலீஸ்

படுகாயம் அடைந்த கார்த்தீஸ்வரன்  பிரபாகரன்   ஆகியோர் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு  கார்த்தீஸ்வரனை பரிசோதனை செய்த மருத்துவர்கள்  அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக   தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த  சாத்தூர் டவுன் காவல்துறையினர்   சாட்சியாபுரம் என்.ஜி.ஓ. காலனியில் வசித்து வரும்  ஐயப்பன் மகன் முனீஸ்வரன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிறந்தநாள் கொண்டாட நண்பர்களுடன் சென்ற இளைஞர்   விபத்தில் பலியான சம்பவம் சிவகாசி பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web