இன்று முதல் அமலுக்கு வரும் மாற்றங்கள்... வங்கி விதிமுறைகள் முதல் ஆதார், ஜி.எஸ்.டி வரை என்னென்ன அப்டேட்?!

 
நவம்பர் 1

இன்று நவம்பர் 1ம் தேதி முதல் வங்கி வாடிக்கையாளர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைப் பயனர்களை நேரடியாகப் பாதிக்கும் பல புதிய நிதி விதிமுறைகள்,  வங்கிக் காப்பாளர் (Nominee) விதிகளில் திருத்தம், ஆதார் கார்டு புதுப்பித்தல் எளிமை, எஸ்.பி.ஐ கிரெடிட் கார்டு கட்டண மாற்றம், ஓய்வூதிய சான்றிதழ் சமர்ப்பிக்கும் கடைசி நாள், ஜி.எஸ்.டி பதிவு முறை எளிமை போன்ற பல முக்கியமான மாற்றங்கள் நடைமுறைக்கு வருகின்றன.

வங்கிக் காப்பாளர் விதி மாற்றம்:

இன்று முதல் வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி கணக்குகள், லாக்கர்கள் மற்றும் பாதுகாப்புப் பெட்டிகளுக்கு நான்கு நபர்கள் வரை காப்பாளராக நியமிக்கலாம். இதன் மூலம் குடும்பத்தினர் அவசரநிலைகளில் எளிதாக பணம் மற்றும் சொத்துக்களை அணுக முடியும். மேலும், காப்பாளரைச் சேர்ப்பது அல்லது மாற்றுவது போன்ற நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன.

நவம்பர்

எஸ்.பி.ஐ கிரெடிட் கார்டு கட்டண மாற்றம்:

நவம்பர் 1ம் தேதி முதல் எஸ்.பி.ஐ கிரெடிட் கார்டு பயனர்களுக்கான கட்டண அமைப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கல்வி சார்ந்த பரிவர்த்தனைகள் மற்றும் ரூ.1,000-க்கு மேல் உள்ள வாலெட் டாப்-அப்புகளுக்கு 1 சதவீத சேவை கட்டணம் விதிக்கப்படும்.

ஆதார் புதுப்பித்தலில் எளிமை:

UIDAI ஆதார் புதுப்பித்தலை எளிதாக்கி வருகிறது. இனி ஆதரிப்பு ஆவணங்களைப் பதிவேற்றாமல் பெயர், முகவரி, பிறந்த தேதி, மொபைல் எண் போன்றவற்றை ஆன்லைனில் திருத்தலாம். ஆனால் கைரேகை அல்லது கருவிழி புதுப்பித்தல்களுக்கு நேரில் மையத்துக்குச் செல்வது அவசியம். புதிய கட்டண அமைப்பின்படி, பயோமெட்ரிக் அல்லாத புதுப்பித்தல்களுக்கு ரூ.75, பயோமெட்ரிக் புதுப்பித்தல்களுக்கு ரூ.125 கட்டணம் செலுத்த வேண்டும்.

முதியோர் மூத்த குடிமக்கள் பென்ஷன்

ஓய்வூதியதாரர்களுக்கான அறிவிப்பு:

ஓய்வூதியதாரர்கள் நவம்பர் 1ம் தேதி முதல் 30-ம் தேதி வரை வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இதைச் சமர்ப்பிக்க தவறினால் ஓய்வூதியம் தற்காலிகமாக நிறுத்தப்படும். மேலும், அரசு ஊழியர்கள் தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) இலிருந்து ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS) நோக்கி மாறுவதற்கான காலக்கெடு நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எளிமையாக்கப்பட்ட ஜி.எஸ்.டி பதிவு முறை:

சிறு வணிகங்களுக்கு வசதியாக புதிய ஜி.எஸ்.டி பதிவு முறை நவம்பர் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. பதிவு செயல்முறை எளிதாக்கப்பட்டதால் தொழில்கள் இணக்க நடவடிக்கைகளைச் சுலபமாக நிறைவேற்றலாம். இந்த மாற்றங்கள் அனைத்தும் நிதி ஒழுங்கு மற்றும் டிஜிட்டல் நிர்வாகத்தை வலுப்படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?