பசுமை நிறைந்த நினைவுகளே... தனது காரை தானே ஓட்டிச் சென்ற ஸ்டாலின்... வைரல் வீடியோ...!!

 
ஸ்டாலின்

தமிழக முதல்வர் ஸ்டாலின் தினமும் காலையில் நடைப்பயிற்சி மேற்கொள்வது வழக்கம். இந்த சமயத்தில் அவருடன் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும் கலந்து கொண்டு அன்றைய நிகழ்வுகள்  நடப்புக்கள் குறித்து பேசியவாறே வாக்கிங், ஜாக்கிங் சைக்கிளிங் செய்வதை சென்னையில் இருக்கும் நாளில் எல்லாம் முதல்வர் தினசரி பழக்கமாக வைத்துள்ளார்.  

சென்னை அடையாறில் உள்ள பூங்காவில்  தான் இந்நிகழ்வுகள் அரங்கேறுவது வாடிக்கை.   அந்த வகையில்,நேற்று நவம்பர் 19ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை புறப்படும் சமயத்தில் தனது பழைய காரை எடுத்துவரச்சொல்லி தானே ஓட்டிக் கொண்டு சென்றார்.  

ஸ்டாலின்
இதையடுத்து, பழைய காரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே ஓட்டிச் செல்ல, முதல்வருடன்  அமைச்சர் மா.சுப்பிரமணியனும்  காரில் உடன்  பயணித்தார். பழைய நினைவுகளை சுமந்தபடி, மாநகரின் சாலைகளில் முதல்வர் பயணம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ்நாட்டுக்கே முதல்வரானாலும் தலைவர் இன்னும் பழச மறக்கலப்பா.. என்னும் தொண்டர்களின் குரலும் சேர்ந்து ஒலிக்கிறது ...  

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!!

From around the web