100% இடஒதுக்கீடு மசோதா : முதல்வரின் ட்விட்டர் பதிவு திடீரென நீக்கப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி!

 
சித்தாராமையா
 

 

தனியார் நிறுவனங்களில் அனைத்து குரூப் சி மற்றும் குரூப் டி பணிகளிலும் கன்னடர்களுக்கு 100 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என முதல்வர் சித்தராமையா செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.பெங்களூரு:கர்நாடகாவில் உள்ள தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளில் மேலாண்மை அல்லாத பணிகளுக்கு 70 சதவீதமும், நிர்வாக நிலை ஊழியர்களுக்கு 50 சதவீதமும் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ் லாட் இன்று காலை தெரிவித்தார்.


தனியார் நிறுவனங்களில் குரூப் சி மற்றும் குரூப் டி பணிகளில் கன்னடர்களுக்கு 100 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என முதல்வர் சித்தராமையா நேற்று அறிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. நேற்று முன் தினம் கர்நாடகாவில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டதாக முதலமைச்சர்  சித்தராமையா தெரிவித்திருந்தார்.  இதுகுறித்த பதிவில், "மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் தொழில்களிலும் 'சி மற்றும் டி' கிரேடு பதவிகளுக்கு 100 சதவீத கன்னடர்களை ஆட்சேர்ப்பு செய்வது கட்டாயமாக்கும் மசோதாவுக்கு நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது" என்று சித்தராமையா தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருந்தார். 

 

ட்வீட்
கன்னடர்கள் தங்கள் மாநிலத்தில் சுகபோக வாழ்க்கை வாழ வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், 'கன்னட நிலத்தில்' வேலை வாய்ப்பை இழக்காமல் இருக்க வேண்டும் என்பதே தனது அரசின் விருப்பம் என்றார். அந்த பதிவு தற்போது அவரது ட்விட்டர் பக்கத்தில் இருந்து திடீரென நீக்கப்பட்டுள்ளது.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!