பகீர்.. 54 சவரன் நகைகளை வங்கி லாக்கரிலேயே ஆட்டைய போட்ட பெண் தொழிலாளி!!

 
மேரி

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ஒன்று எஸ்பிஐ. இதன் கிளைகள் இந்தியா முழுவதும் பறந்து விரிந்துள்ளன. அந்த வகையில் சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் எஸ்பிஐ வங்கிக்கிளை ஒன்று  செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் அக்டோபர்  6ம்தேதி அதிகாரிகள் தணிக்கை செய்தனர். அந்த சமயத்தில்  வங்கி ஊழியர்கள் அனைத்தையும் சரிபார்த்தனர். அதன்படி வங்கியின் லாக்கரில் இருந்த அடகு வைத்த வாடிக்கையாளர்களின் 54 சவரன் நகைகள் மாயமானது கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

எஸ்பிஐ

அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. அதே வங்கியில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து  வந்த லூர்து மேரி என்பவர் நகைகளை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் வங்கி அதிகாரிகள் காவல்துறையில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில்  லூர்து மேரியை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

சிறை

அப்போது, வாடிக்கையாளர்கள் வைத்த நகைகளை ஒரு பையில் எடுத்து வைத்துவிட்டு, பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக திருடிவந்ததை ஒப்புக் கொண்டார்.  இந்த நகைகளை தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்து லட்சக்கணக்கில் பணம் பெற்றதும் விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி  காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.துப்புரவு தொழிலாளியாக பணிபுரிந்த பெண்ணே நகைகளை திருடியிருப்பது  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web