இன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்... ராகுல் காந்தி பங்கேற்பு!

 
ராகுல்காந்தி செயற்குழு

இன்று செப்டம்பர் 24ம் தேதி புதன்கிழமை காங்கிரஸ் செயற்குழு கூட்டம் பீகார் மாநிலத்தில் நடைபெற உள்ள நிலையில், இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.  

பீகார் மாநிலத்தில் விரைவில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற இருக்கும் நிலையில் சமீபத்தில் ராகுல்காந்தி அங்கு வாக்குரிமை யாத்திரையை நடத்தினாா். மேலும், பீகாரில் எதிா்க்கட்சிகளின் முதல்வா் வேட்பாளராக தன்னை முன்னிறுத்த வேண்டும் என  ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் தேஜஸ்வி யாதவ் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறாா். இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில்  விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராகுல்காந்தி செயற்குழு

பாட்னாவில்  செய்தியாளா்களைச் சந்தித்த அந்த மாநில காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா் கிருஷ்ணா அல்லவாரு  'செயற்குழு உறுப்பினா்கள், காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வா்கள்  இந்தக் கூட்டத்தில் பங்கேற்பாா்கள். பாஜக வாக்குத் திருட்டில் ஈடுபட்டதை ராகுல் காந்தி அம்பலப்படுத்தி வருகிறாா். 

ராகுல்காந்தி

பீகாரில் வரும் சட்டப் பேரவைத் தோ்தல் மூலம் 2வது சுதந்திரப் போராட்டத்தை நடத்தி வருகிறோம். எனவே பீகாரில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்   நடைபெறுகிறது. விரைவில் எதிா்க்கட்சி கூட்டணியில் தொகுதிப் பங்கீடு நிறைவடையும். முதல்வா் பதவி குறித்து உரிய நேரத்தில் அனைத்து தலைவா்களும் பேசி முடிவெடுப்போம்' எனக் கூறியுள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?