தவெகவை கிழித்தெடுத்த நீதிமன்றம்.. ஏன் 10,000 பேர் தான் வருவார்கள் என்றீர்கள்? சராமாரி கேள்வி!

 
கரூர் விஜய்

இன்று விசாரணையில் தவெகவுக்கு நீதிமன்றம் சராமாரியாக கேள்வி எழுப்பி திக்குமுக்காட செய்துள்ளது. அரசியல் கட்சியினருக்கும், தலைவர்களுக்கும் சமூக பொறுப்பு மிக அவசியம் என்பதை இது தெளிவுப்படுத்தியுள்ளது.

நீங்கள் கேட்டிருந்த மூன்று இடங்களுமே சிறியவை தான் எ ந்றும், மைதானம் போன்ற பகுதியை தாருங்கள் என ஏன் கேட்கவில்லை என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

கரூர்

நிகழ்ச்சிக்கு ஏன் 10,000 பேருக்கு மட்டும் அனுமதி கேட்டீர்கள் ? என்று கேள்வியெழுப்பிய நீதிமன்றம், அதே இடத்தில் இபிஎஸ் பிரச்சாரம் செய்த நிலையில், இபிஸுக்கு வருவது தான் கட்சி கூட்டம்; விஜய்க்கு அனைத்து தரப்பினரும் வருவார்கள் என்றும், அதிக கூட்டம் வரும் என்று விஜய்க்கு தெரியுமா? அவரிடம் சொல்லப்பட்டதா? என்றும் கேள்வி எழுப்பியது. 

கரூர் விஜய்

மேலும் விடுமுறை நாள் என்பதால் பல தரப்பும் வருவார்கள் என தெரியாதா? அவரவர் உயிரைக் காப்பாற்ற அவரவர் ஓடுகிறார்கள்; தவறு யார் மீது உள்ளது சொல்லுங்கள் என்று சராமாரியாக கேள்வியெழுப்பிய நீதிபதி, எந்த அடிப்படையில் 10,000 பேர்தான் வருவார்கள் என சொன்னீர்கள்? விஜய்யைப் பார்க்க குழந்தைகள் வருவார்கள் என்பது தெரியாதா? என அடுக்கடுக்கான கேள்விகளைக் கேட்டு நீதி மன்றம் விளாசியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?