மொபைல் பறிப்பு... பைக்கில் 350 மீ சிறுமியை தரதரவென இழுத்து சென்ற கொடூரம்!

 
பைக்

பஞ்சாப்  மாநிலம் ஜலந்தரில்  12-ம் வகுப்பு படிக்கும் லட்சுமி (18) என்ற மாணவி தனது இளைய சகோதரியுடன் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர மோட்டார் வாகனத்தில் வந்த மூவர் லட்சுமியின் செல்போனை பறிக்க முயன்றுள்ளனர். 
ஆனால் தனது செல்போனை இறுக்கமாக பிடித்துக்கொண்ட லட்சுமி அந்த வழிப்பறி கொள்ளையர்களிடம் போராடியுள்ளார்.

லட்சுமியின் கையை பிடித்தபடி அந்த தரதரவென சாலையில் 350 மீட்டர்களுக்கு இழுத்துசெல்லப்பட்டார். கடைசியாக மர்ம நபர்கள் அந்த செல்போனை பிடுங்கிக்கொண்டனர்.சிறிதுதூரம் சென்ற பின் வண்டியை நிறுத்தி அவர்களின் ஒருவன் சாலையில் விழுந்து கிடந்த லட்சுமியை பார்த்து மன்னித்து விடு எனச் சொல்கிறார்.

செல்போன் பறிப்பு

அதன்பிறகு செல்போனுடன் அங்கிருந்து மற்ற இருவருடன்  சென்றுவிட்டனர்.  லட்சுமி சாலையில் இழுத்துச்செல்லப்பட்ட சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. படுகாயமடைந்த லட்சுமி மருத்துவமனையில் அனுபாதிக்கப்பட்டுளார். லட்சுமியின் பெற்றோர் புகார் அளித்ததை அடுத்து அந்த காட்சிகளில் அடிப்படையில் கொள்ளையர்களை தேடிய போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை