அதிரடி சரவெடி... இந்த வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் மாதம் வெறும் ரூ340 மட்டுமே!

 
சுங்கச்சாவடி
 

தமிழகம் முழுவதும் உள்ள 67 தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு மாதம் வெறும் ரூ.340-க்கு பாஸ் வழங்கப்பட்டு வருவது பலரும் அறிந்திராத தகவல். இதன்படி  சுங்கச்சாவடி அமைக்கப்பட்ட பகுதியைச் சுற்றியுள்ள 20 கிலோமீட்டர் தொலைவில் வசிக்கும் மக்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாக அமைந்திருக்கும்.  பரனூர் சுங்கச்சாவடியை எடுத்துக்கொண்டால், அதே பகுதியைச் சேர்ந்த வாகன பதிவெண் கொண்ட தனிநபர் வாகனங்கள் இந்த சலுகையை பெற்றுக் கொள்ளலாம்.  
இந்த திட்டத்தின் மூலம், தினமும் சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லாமல், மாதம் ஒரு முறை மட்டும் கட்டணம் செலுத்தி வாகனத்தை இயக்கிக் கொள்ளலாம்.  குறிப்பாக தினமும் சுங்கச்சாவடியை கடந்து செல்லும் உள்ளூர் மக்களுக்கு பெரும் நிவாரணமாக அமைந்திருப்பதாக வாகன ஓட்டிகள் ஆறுதல் தெரிவித்துள்ளனர்.  

      

இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு வசூலிக்கப்படும் கட்டணங்கள் ஆண்டுக்கு இருமுறை பரிசீலிக்கப்பட்டு மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழகம் முழுவதும்  மொத்தம் 67 சுங்கச்சாவடிகள் உள்ளன.

சுங்கச்சாவடி

இந்த சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்கள் என 2 முறை கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது. தேர்தல் காரணமாக இந்த ஆண்டு ஜுன் மாதம், 36 சுங்கச்சாவடிகளில் புதிய கட்டணம் அமலுக்கு வந்தது. 5 சதவீதம் வரை அப்போது கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில்,  செப்டம்பர் 1ம்தேதி முதல், ஏனைய 25 சுங்கச்சாவடிகளில் 5 முதல் 7 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுங்கச்சாவடி

இதன் மூலம் இந்த சுங்கச்சாவடிகள் வழியாக கடந்து செல்லும் வாகனங்கள் சுமார் ரூ.5 முதல் ரூ.150 வரை ஏற்கனவே இருக்கும் கட்டணத்தைவிட கூடுதலாக செலுத்த வேண்டி இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web