வெடித்து சிதறிய சிலிண்டர்.. 3 குழந்தைகள் உட்பட 5 பேர் பலி.. முதல்வர் இரங்கல்!
உத்தரப் பிரதேச மாநிலத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீடு தரைமட்டமானது. இதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உத்தரபிரதேச மாநிலம், அயோத்தி மாவட்டத்தில் பக்லா பாரி கிராமத்தில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒரு வீட்டில் பாதுகாப்பற்ற முறையில் எல்பிஜி சிலிண்டர் வைத்து பயன்படுத்தி வந்துள்ளதால் வெடித்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த கோர விபத்தில் 3 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ராம்குமார் கசோதன் என்பவர் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் அந்த வீட்டில் வசித்து வந்துள்ளார். நேற்று முன் தினம் நள்ளிரவு வீட்டில் இருந்த பெரிய சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியதில் வீடு முற்றிலுமாக இடிந்து தரைமட்டமானது. திடீரென வெடி சத்தம் கேட்டு கிராமத்தினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். படுகாயமடைந்த 5 பேருமே உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும், அவர்களது உயிரை காப்பாற்ற முடியவில்லை.

விபத்தின் காரணமாக பாதுகாப்பற்ற முறையில் சிலிண்டர் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இந்த துயரமான நிகழ்வுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரித விசாரணை மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
