விசாரணைக்கு அழைத்து சென்ற இளைஞர் உயிரிழப்பு.. உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!!

 
சீனிவாசன்

காஞ்சிபுரம் மாவட்டம்  குண்டு குளம் பகுதியில் வசித்து வருபவர் லோகநாதன்.   அவருடைய மகன் சீனிவாசன் . இவர்   நேற்று கீழ்க்கதிப்பூர் பகுதியில் உள்ள அரசு மதுபான கடையில் 30 மதுபான பாட்டில்களை வாங்கி வீட்டுக்கு எடுத்து சென்றார். அப்போது   காஞ்சிபுரம் கலால் பிரிவு காவலர்கள் மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.  

சீனிவாசன்

சீனிவாசனை  பைக்கில் அமர வைத்து விசாரணைக்காக அழைத்து சென்றனர். காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு அருகே சீனிவாசன் தப்பிஓட முயற்சி செய்தான். எதிர்பாராத விதமாக அந்த வழியாக வந்த தனியார் பேருந்து சீனிவாசன் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.  சீனிவாசனை கலால் துறையினர் முறையாக அழைத்து செல்லாததால் இந்த மரணம் ஏற்பட்டுள்ளது என உறவினர்கள் கூறி சடலத்தை வாங்க மறுத்துவிட்டனர்.  

சீனிவாசன்

கூடுதல் துணை கண்காணிப்பாளர் சார்லஸ் நடத்திய பேச்சுவார்த்தையில்   சீனிவாசனின் மரணத்துக்கு கலால் காவல் துறையினர்தான் காரணம் என்றும், அரசுத் தரப்பில் இழப்பீடு வழங்கப்பட்டு நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் உறவினர்கள் வாதிட்டனர்.   காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வெளியே உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால்  பரபரப்பு நிலவி வருகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web