சோகம்.. பிரபல இயக்குனர் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் உறைந்த திரையுலகம்..!

 
ஆர்த்தி குமார்

இயக்குனர் ஆர்த்தி குமார் நெல்லை வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர். இவரது இயற்பெயர் சுரேஷ் குமார். திரையுலகில் நுழைந்த பிறகு ஆர்த்தி குமார் என்று தனது பெயரை மாற்றிக்கொண்டார். இவர் நேற்று முன்தினம் உடல் நலக்குறைவு காரணமாக பாளை ஹைகிரவுண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்தும் பலனின்றி இரவு 8 மணியளவில் உயிரிழந்தார்.

சோகம்...இயக்குநர் ஆர்த்திகுமார் காலமானார்!

அவரது உடலில் உள்ள பிரச்சனைகள் குறித்த தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை. நேற்று அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு இன்று சென்னை கொண்டு வரப்படுகிறது. அதன் பிறகு இறுதிச் சடங்குகள் நடைபெறும்.

சோகம் - சவுண்ட் பார்ட்டி திரைப்பட இயக்குனர் ஆர்த்தி குமார் காலமானார்.! -  Seithipunal

இவர் நடிகர் சத்யராஜ் நடித்த'அழகேசன்', 'சவுண்ட் பார்ட்டி' ஆகிய படங்களை இயக்கியவர். பல இயக்குனர்களிடம் கதையாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இயக்கம் மட்டுமின்றி ஞான ராஜசேகரனின் ‘பெரியார்’ படத்தில் ராஜாஜியாக நடித்தார். அவரது மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web