நிச்சயதார்த்தம் முடிந்தது... அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் ஸ்மிருதி மந்தனா... வைரலாகும் வீடியோ!
Nov 20, 2025, 22:23 IST
உலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தனது காதலரை நவம்பர் 20ம் தேதி மணக்க இருக்கிறார் என்று செய்தி கடந்த ஒரு வார காலமாக இணையத்தில் வைரலாகி வந்தது. இந்த செய்திக்கு இருவருமே மறுப்பு தெரிவிக்காமல் மெளனம் காத்து வந்தனர். திருமண அழைப்பிதழ் என்றும் இணையத்தில் வேகமாக பரவியது.
இந்நிலையில் இன்று தனது நீண்டநாள் காதலரான இசையமைப்பாளர் பாலாஷ் முச்சலுக்கும், ஸ்மிருதி மந்தனாவுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. இந்த புகைப்படங்கள் வைரலான நிலையில், தனது நிச்சயதார்த்த மோதிரத்தைக் காட்டி செய்தியை உறுதிப்படுத்திய ஸ்மிருதி மந்தனா, நண்பர்களுடன் சேர்ந்து ஆடும் டான்ஸ் வீடியோவும் வைரலாகி வருகிறது.
இவர்களது உறவை உறுதி செய்யும் வகையில், ஸ்மிருதி தனது அணியினருடன் இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில், நண்பர்கள் நடனமாடுகிற வீடிய்யோவும், பின்னர் அவர் கைத் தோளைத்தொட்டப்படியே தனது கையை உயர்த்துகிறார்; அப்போது அவர் அணிந்திருக்கும் நிச்சயதார்த்த மோதிரம் நன்றாக தெரிகிறது. நவம்பர் 23ம் தேதி இருவருக்கும் திருமணம் என்று ஒரு செய்தி இணையத்தில் உலா வரும் நிலையில், திருமண தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரையில் வெளியாகவில்லை.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

