விருதுநகரில் பரபரப்பு... அரசு பள்ளி ஆசிரியரை அரிவாளால் வெட்டிய மாணவர்கள்!

 
சிவகாசி

நன்றாக படிக்க சொல்லி, மாணவர்களைக் கண்டித்த அரசு பள்ளி ஆசிரியரை, மாணவர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் சிவகாசியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் பகுதியில் எஸ்.ஆர்.என் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் பொருளாதார பிரிவு ஆசிரியராக கடற்கரை (42) என்பவர் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், பொருளாதார ஆசிரியர் கடற்கரை, பள்ளியின் 11-ம் வகுப்பில் படிக்கும் மாணவர்கள் 2 பேரை நன்றாக படிக்க சொல்லி கண்டித்ததாக கூறப்படுகிறது. அன்று முதல் ஆசிரியர் கடற்கரை மீது இரு மாணவர்களும் கடுமையான கோபத்தில் இருந்து வந்துள்ளனர்.

Murder

இந்நிலையில் நேற்று காலை ஆசிரியர் கடற்கரை வழக்கம் போல் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த போது, ஆசிரியரை வழிமறித்த மாணவர்கள் இருவரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவர் தலையில் தாக்கி விட்டு தப்பி ஓடி உள்ளனர். ஆசிரியரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் ஆசிரியர் கடற்கரையை மீட்டு சிகிச்சைக்காக திருத்தங்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். 

இந்த சம்பவம் குறித்து திருத்தங்கல் போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், அந்த இரு மாணவர்களும் 10ம் வகுப்பில் தோல்வி அடைந்து தனித்தேர்வு எழுதிவிட்டு மீண்டும் 11-ம் வகுப்பில் சேர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் குறித்து சிவகாசி டிஎஸ்பி தனஞ்ஜெயன் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.

Thiruthangal PS

இந்த சம்பவத்தின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் நான்கு தனிப்படை அமைத்து ஆசிரியரை வெட்டிச் சென்ற மாணவர்களை தேடி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவி காணப்படுகின்றது.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web