காதலரை கரம் பிடித்த பிரபல பாடகி... குவியும் வாழ்த்துகள்!
பாடகி செலினா கோம்ஸ் தனது காதலரை கரம் பிடித்தார். பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில், இந்த திருமணத்தில் நெருங்கிய நண்பர்களும், ஹாலிவுட் பிரபலங்களும் கலந்து கொண்டு தம்பதியரை வாழ்த்தினார்கள்.
பிரபல அமெரிக்க நட்சத்திர பாடகியான செலினா கோம்ஸ் தனது காதலர் பென்னி பிளாங்கோவை கரம் பிடித்துள்ளார். இந்த பிரமாண்டமான திருமணத்தில் டெய்லர் ஸ்விப்ட், பாரிஸ் ஹில்டன், மார்ட்டின் ஷார்ட் மற்றும் ஆஷ்லே பார்க் போன்ற ஹாலிவுட் நடிகர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள். பாடகியின் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

பாடகி செலினா கோம்ஸ் மற்றும் பென்னி பிளாங்கோ பல வருடங்களாக காதலித்து வருகின்றனர். இவர்களின் நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
