வீடியோ... 5000 கிலோ வெண்டைக்காயை ஏரியில் கொட்டிய விவசாயி!!

 
வெண்டைக்காய்

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தக்காளி விலை கிலோ ரூ200க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் நடுத்தர வர்க்கத்தினர் கடும் அவதிப்பட்டனர். தற்போது படிப்படியாக குறைந்து கிலோ ரூ 20க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.அதே நேரத்தில் அனைத்து காய்கறிகளின் விலையும் கணிசமாகக் குறைந்துள்ளது . திருப்பத்தூர் மாவட்டம் மாணவள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் ரமேஷ்.

இவர் விவசாயத்தொழில் செய்து வருகிறார்.இவர் தற்சமயம் வெண்டைக்காய் பயிர் செய்து சுற்றுவட்டார விவசாயிகளிடம் வெண்டைக்காய் கொள்முதல் செய்து பிற நகரங்களில்  விற்பனை செய்து வருகிறார்.இந்நிலையில் கடந்த சில வாரங்களாக வெண்டைக்காயின் விலை  கிலோ  ரூ2 க்கு   விலை குறைந்துள்ளது. இதனால் கார் வாடகை கூட கிடைக்கவில்லை. எனவே விரக்தி அடைந்த ரமேஷ் 5,000 கிலோ வெண்டைக்காயை ஏரியில் கொட்டினார்.

வெண்டைக்காய்

வியாபாரிகள் யாரும் வெண்டைக்காய் வாங்க முன் வரவில்லை இதனால்  வேறு வழி இல்லாமல் அவற்றை ஏரியில் கொட்டிவிட்டதாக தெரிவித்துள்ளார்.  இதே நிலை நீடித்தால் விவசாயிகள் தொழிலை விட்டு போக வேண்டியது தான் என வேதனையுடன்  தெரிவித்துள்ளார். விலை அதிகமானால் மட்டும் அரசு நேரடியாக கொள்முதல் செய்து ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்கிறது. அதே போல் தற்போது விலை குறைந்த நேரத்திலும் கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web