புலிகளுக்கு விஷம் வைத்து கொலை செய்த விவசாயி!! திடுக்கிடும் வாக்குமூலம்!!

 
புலி

நீலகிரி மாவட்டத்தில் 2 ஆண்புலிகள் ஏரிக்கரையோரத்தில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தன. கடந்த  2 வாரங்களில் மட்டும் 5 புலிகள் உயிரிழந்து இருப்பதற்கு   வனத்துறை அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளன  இந்நிலையில் உதகை அருகே உள்ள எமரால்டு கிராமம் அருகில் உள்ள அவலாஞ்சி அணை, தண்ணீர் தொட்டிக்கு செல்லும் வழியில் உள்ள வாய்க்காலில் மர்மமான முறையில்  உடல்களில் எந்த வித காயங்களும் இல்லாமல் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

புலி

 இதனையடுத்து 2 புலிகளின் உடல்களும்   கால்நடை மருத்துவர்கள் மூலம் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு புலிகளின் உடல்களை எரியூட்டப்பட்டன.  இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில்  புலிகள் இறந்து கிடந்த இடத்திற்கு சற்று தொலைவில் மாடு ஒன்று இறந்து கிடந்ததை வனத்துறையினர் கண்டறிந்தனர்.  அந்த பகுதியில் யாருடைய பசுமாடு இறந்தது என்பது குறித்து விசாரிக்கப்பட்ட போது  எமரால்டு பகுதியை சேர்ந்த விவசாயி சேகரின் மாடு அது என்பது கண்டறியப்பட்டது.  அவரிடம் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.  

சேகர்


கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மீண்டும் சேகரின் பசுமாட்டை புலி அடித்து கொன்றுவிட்டது. அதனை பலிவாங்கத் துடித்த அவர்  இறந்த பசு மாட்டின் உடலில் விஷம் கலந்து அந்த பகுதியில் போட்டுள்ளார். அதனை சாப்பிட்ட புலிகள்  உயிரிழந்துவிட்டன.  சேகரின் மாட்டை புலி அடித்துக் கொன்றதால் பழிக்குப் பழியாக புலியை கொலை செய்ததை  விசாரணையில் ஒப்புக் கொண்டார். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web