சோகம்.. மாட்டை காப்பாற்ற சென்ற விவசாயி ரயிலில் அடிபட்டு பலி!!

 
நடராஜன்

திருப்பத்தூர் மாவட்டத்தில்  குனிச்சி மோட்டூர் பகுதியில் வசித்து வருபவர்   மொட்டையன் . இவரது  நடராஜன். 70 வயதான நடராஜன்   தன்னுடைய நிலத்தில் விவசாயம் செய்து கொண்டிருந்தார். நடராஜன் மாடு மேய்த்துக் கொண்டிருந்த நிலையில், குனிச்சி மோட்டூர் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் மாட்டின் கால் மாட்டிக்கொண்டது. இதனால் மாடு கத்த தொடங்கியது.

 ரயில் தண்டவாளம்

மாட்டின் கத்தலை கேட்ட விவசாயி நடராஜன் மாட்டை காப்பாற்ற சென்றார். அதே நேரத்தில் சென்னை பெங்களூர்  வெஸ்ட் கோஸ்ட் ரயில் அதி வேகமாக வந்து கொண்டிருந்தது.  நடராஜன் மாட்டை அங்கிருந்து அப்புறப்படுத்த ரயில்வே தண்டவாளத்திற்கு ஓடி வந்து மாட்டை தள்ளி விட்டார். ஆனால் நடராஜனை முந்திய ரயில் மாட்டையும், அவரையும் தூக்கிஅடித்தது. இதில் மாடு பரிதாபமாக  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

ஆம்புலன்ஸ்


 இவர்களின் கூக்குரல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் தூக்கி வீசப்பட்ட நடராஜனை  மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள்  நடராஜன் ஏற்கனவே உயிரிழந்து  விட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாட்டை காப்பாற்ற சென்ற விவசாயி ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web